சிறுவாடு 6
சிறுவாடு 6 இந்த தொடர் பதிவுகளை வாசித்து வரும் நண்பர் ஒருவர் என்னுடன் தொடர்பு கொண்டு நீண்டநேரம் உரையாடிக்கொண்டிருந்தார். உரையாடலின் முக்கிய சாராம்சம், முதலீடு பற்றிப் பேசுவதாகச் சொல்லி பங்குச்சந்தை குறித்துப் பேசிக்கொண்டிருப்பது பற்றியும், முதலீட்டின் அவசியம் பற்றியும், எனது சொந்த அனுபவத்தினைப் பற்றியும் இருந்தது. இந்தத் தொடர் பதிவுகளின் நோக்கம் என்பது வெவ்வேறு விதமான சேமிப்பு மற்றும் முதலீடுகளைப் பற்றி பேசுவதுதான்… பங்குச்சந்தை பற்றிய அடிப்படை அறிதல் இல்லாதவர்களும் அதனைப் புரிந்து கொள்ளவேண்டும், அதுவும் ஒரு முக்கியமான முதலீட்டு வழி என்பதனையும் தெரிந்து கொள்ளல் வேண்டும் என்பதற்காகவே அதனைப் பற்றி முதலில் பேச ஆரம்பித்தேன். ( பங்குசந்தை பற்றிய விரிவான நூலினைத் தனியாக வெளியிடுகிறேன்) இதனைத் தொடர்ந்து மியூச்சுவல் ஃபண்ட், கடன் பத்திரங்கள், கிரிப்டோ கரன்சி ( ஆம்…. அதனைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்..) இன்னும் இன்னுமான முதலீட்டு முறைகளையும் பற்றிப் பேசலாம்…. அது மட்டுமல்ல, நம்மையறியாது நம் பாக்கெட்டிலிருந்து சில்லறை சில்லறையாக வெளியேறும் ( திருடப்படும் என்று கூடச் சொல்லலா...