வாழ்க்கை

 


இறுதியாய் ஒரு தூக்கம்-

விழிக்காமலே நேர்ந்தது ….

 

கைசுற்றிக் காத்திருந்த

உறவுகளின் ஞாபகம்

- நினைவுகளை உதிர்த்தது….!

 

உறவின் பலம் பொருத்து

நினைவுகள் உதிர்க்க

சில – சில தினமும்

சில – சில வருடமும் கொண்டன!

 

முற்றிலுமாய் ஒரு நாள் –

நினைவுகளிலும் இறந்தவனான போது

அறிந்து கொள்ள முடிந்தது …..

 

வாழ்ந்த நாட்களின் கணக்கென்பது

சுவாசத்தின் இறுதி மூச்சிலிருந்து

நினைவுகளின் இறுதி மூச்சு வரையென்று…!

*****

Comments

Popular posts from this blog

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _நாள் 21

Preparing a book in Kindle direct publishing

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _ நாள் 27