Preparing a book in Kindle direct publishing
கிண்டிலில் புத்தகம் பதிவேற்றும்போது அது குறிப்பிட்ட சில வடிவங்களில் இருக்கும் புத்தகங்களை மட்டுமே அனுமதிக்கும்.
பொதுவாக அனைவரும்
புத்தகங்களை word format ல் தயார் செய்து பதிவேற்றுவார்கள்.
இதில் உங்கள்
புத்தகத்தின் தலைப்புகளை நேர் செய்வது, அத்தியாயம் பிரிப்பது போன்ற வேலைகளை கவனமாகச்
செய்தல் வேண்டும். மேலும் கொஞ்சம் கால நேரம் எடுத்துக்கொள்ளும்.
இதற்கும்
ஒரு சுலபமான வழியினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள்.
அது
Kindle create / KPF எனப்படும் Kindle
Package format வசதி.
உங்கள்
Google browser ல் சென்று Kindle Create என அடித்துத்தேடினால் அமேசான் பக்கத்திற்குச்
சென்று விடலாம். அதில் முதல் பக்கத்தில் Kindle
Create என்றும் அதன் கீழே Download fo PC என்றொரு சுட்டியும் இருக்கும். அதனைச் சுட்டினால்
உங்கள் கணிணியில் நிறுவ வேண்டிய மென்பொருள் தரவிறக்கம் ஆகும்.
அந்த
file னைத் திறந்து Run என்பதனை அழுத்தி அந்த மென்பொருளை நிறுவிக்கொள்ளவும். இப்போது
உங்கள் கணிணியில் Kindle Create என்பதன்
Icon தெரியும்.
அடுத்த செயலுக்குச்
செல்லும் முன்னால், உங்கள் புத்தகத்தினை word format ல் அடித்து தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.
பிழைதிருத்தங்கள்
எல்லாவற்றையும் சரி செய்துகொள்ளுங்கள்.
Word
file னை கணிணியில் சேமிக்கும் முன், Word file ன்
Review என்னும் கட்டளையில் உள்ளே சென்று பாருங்கள். Spelling & Grammer
என்னும் கட்டளை இருக்கும். அதில் Spell Check மற்றும் Grammer Check ஆகியனவற்றை நீக்கிவிடவும்.
இதனை மறக்காமல்
செய்துவிடுங்கள். இல்லையெனில் அனைத்து வார்த்தைகளுமே தவறு தவறு என்று காண்பித்து, புத்தகத்தை
உள்ளிட இயலாமல் போய்விடும்.
இப்போது
Kindle Create னை திறக்கவும்.
திறந்தவுடன்
கீழே Resume Existing Project, New Project from file என்ற இரண்டு கட்டளைகள் இருக்கும்.
Resume
Existing Project என்பது ஏற்கனவே நீங்கள் கிண்டில் கிரியேட்டரில் மாற்றி வைத்திருக்கும்
புத்தகத்தினை திறக்க உதவும் கட்டளை.
New
Project from file என்பதனைக் கிளிக் செய்தால் புதிய புத்தகத்தினை உள்ளிட முடியும்.
அதனைக் கிளிக்
செய்து உள் நுழைந்தவுடன் Content Language
என்றொரு கட்டளை இருக்கும். அதில் தமிழ் இருக்காது. English என்பதனையே தேர்வு
செய்து கொள்ளுங்கள்.
அதன் கீழே
உள்ள Choose file என்னும் கட்டளையின் மூலம் உங்கள் புத்தகத்தினை உள்ளிடலாம்.
உங்கள் புத்தகம்
உள்ளேற சற்று நேரம் பிடிக்கும்.
உள்ளேறியவுடன்
Continue என்ற கட்டளை வரும் அதனை கிளிக் செய்தவுடன்
Get started என்ற கட்டளை வரும்.
இப்போது உங்கள்
திரை மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டு நடுவில் உங்கள் புத்தகம் தெரியும்.
இடது மேல்
மூலையில் ஒரு பெட்டி திறந்திருக்கும். அதன் கீழே உள்ள Reject all என்ற கட்டளையைக் கொடுத்து
அதனைத் தற்சமயம் மூடி விடவும்.
இப்போது உங்கள்
புத்தகத்தினை ஒவ்வொரு பக்கமாய்ச் சென்று பார்த்துக்கொள்ளலாம்.
உங்கள் திரையின்
வலது ஓரத்தில் உள்ள பெட்டியில் Elements on Page
என்ற பகுதியில் Chapter Title என்று இருக்கும்.
உங்கள் புத்தகத்தின்
ஒவ்வொரு அத்தியாயத் தலைப்பினையும் தேர்வு செய்து இந்தக் கட்டளையை அழுத்தினால் அது அத்தியாயத்
தலைப்பாக மாறிக்கொள்ளும். அதேபோல துணைத் தலைப்புகளை Chapter Sub Title என்பதன் மூலம்
மாற்றிக்கொள்ளலாம்.
(அந்த வலது
பக்கப் பெட்டியில் உள்ள கட்டளைகள் ஒவ்வொன்றும் உங்கள் புத்தகத்தினை சீர் படுத்தவும்,
அழகு படுத்தவும் உதவும். நான் மிக முக்கியமானதை மட்டும் இங்கே விளக்கியுள்ளேன்)
இப்போது இடது பக்க பெட்டிக்கு வாருங்கள். அந்தப்
பெட்டியின் மேல் பகுதியில் Front Matter என்ற ஒரு கட்டளையும் அருகில் ஒரு + குறியும்
இருக்கும். அந்த + குறியினை கிளிக் செய்யுங்கள்.
அதில் கீழ்க்கண்ட
கட்டளைகள் வரிசையாய் இருக்கும்.
·
Title
Page
·
Copy
right
·
Dedication
·
Epigraph
·
Table
of contents
·
Preface
·
Introduction
·
Prologue
·
Foreward
·
Standard
page(Front matter)
இவை அனைத்துமே
உங்கள் புத்தகம் ஆரம்பிக்கும் முன்னால் முதல் சில பக்கங்களில் வருவன.
இதிலும் முக்கியமான
சிலவற்றைப் பற்றிப்பார்க்கலாம்.
முதலில்
Title Page. இதனைத் தேர்வு செய்தால் உங்கள் புத்தகத்தின் தலைப்பு, துணைத்தலைப்பு, ஆசிரியர்
பெயர் போன்றவற்றைக்கேட்கும். பதிப்பாளரின் பெயர் மற்றும் லோகோ போன்றவை இருந்தாலும்
அதில் Upload செய்யலாம். இந்த விபரங்களின்படி உங்கள் புத்தகத்தின் முதல் பக்கம் (தலைப்புப்
பக்கம்) உருவாக்கப்படும்.
அடுத்ததாக Copy right குறித்த கட்டளை. இதில் உங்கள் பெயரினையும்,
புத்தகம் வெளியிடும் ஆண்டினையும் குறிப்பிட்டால் Copy right declaration அடுத்த பக்கமாக
வந்துவிடும்.
அடுத்ததாக
Dedication கட்டளை. இதில் நீங்கள் உங்கள் புத்தகத்தினை யாருக்கு சமர்ப்பிக்க விரும்புகின்றீர்கள்
என்ற விபரத்தைக் கொடுத்தால், அது அடுத்த பக்கமாக தயார் செய்யப்படும்.
அடுத்த முக்கியமான
கட்டளை Table of Contents. இதனைக் கிளிக் செய்தால் ஏற்கனவே நீங்கள் தெரிவு செய்து வைத்திருக்கும்
அத்தியாயத் தலைப்புகள், அதன் துணைத் தலைப்புகள் ஆகியவை வரிசை கட்டி வந்து விடும். ஒரு
முறை எல்லாவற்றையும் சரிபார்த்துவிட்டு OK என்பதனைக் கிளிக் செய்தால் தலைப்புகளின்
அட்டவணைப் பக்கம் உருவாகிவிடும். கிண்டிலில் வாசிக்கும் போது அந்த தலைப்பினைக் கிளிக்
செய்தால் அந்த தலைப்பின் பக்கத்திற்கே அது அழைத்துச்சென்றுவிடும்.
இதனைத் தவிர
மற்ற விசயங்கள் வேண்டுமெனில் நீங்கள் அந்தந்தக் கட்டளைகளைத் தெரிவு செய்து விபரங்கள்
கொடுத்துக்கொள்ளலாம்.
இப்பொழுது
உங்கள் புத்தகம் தயாராகிவிட்டது.
வலது மூலையின்
மேற்பகுதியில் Preview என்றொரு கட்டளை இருக்கும். அதனைக் கிளிக் செய்தால் உங்கள் புத்தகம்
கிண்டிலில் எப்படித்தெரியும் என்ற வடிவம் உருவாகும். ஒவ்வொரு பக்கமாய் நீங்கள் பார்த்துக்கொள்ளலாம்.
பின்னர் அதனை
மூடி விட்டு Preview க்கு அருகில் உள்ள
Publish என்ற கட்டளையைக் கிளிக் செய்தால், உங்கள் புத்தகம் தயார். அது உங்கள்
கணிணியில் KPF என்னும் வடிவத்தில் (format) சேமிக்கப்பட்டிருக்கும்.
Comments
Post a Comment