பணம் என்றோர் அளவை.

 எல்லா விசயங்களையும் பணத்தினை வைத்து அளவிடும் ஒரு காலகட்டம் இது. 


இங்கிருந்து மதுரை எவ்வளவு தூரம் என்றால் 30ரூபாய் கட்டண தூரம் …..


இங்கே இருந்து பழநி போய் வர நேரத்தில் நான் முன்னூறு ரூபாய் சம்பாதித்து விடுவேன் ……


அவங்க உங்கள் நெருங்கிய சொந்தமா…. இல்லை இல்லை ஒரு அஞ்சாயிரம் பத்தாயிரம் கடன் வாங்கும் அளவுக்கு சொந்தம்….


இப்படியாய் எல்லா விசயங்களும் பணத்தினை வைத்தே அளவிடப்படுகிறது.


இதற்கு மனம் முழுவதுமாய்ப் பழகி விட்டாலும், நெருங்கிய அன்பர்களிடமிருந்து அல்லது நாம் அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறவர்களிடமிருந்து நமக்கும் அப்படிப்பட்ட ஒரு அளவுகோல் எட்டிப் பார்க்கும் போது வலிக்கத்தான் செய்கிறது.


ஒரு திரைப்படத்தில் ஜாக்கிஜான் பேசும் ஒரு வசனம் வரும்…. “My god is the most powerful god in the world…my god name is money…”  ( என் கடவுள்தான் உலகிலேயே பெரியவர்…. என் கடவுளின் பெயர் பணம் ) 


அதுதான் பல நேரங்களில் செயல்பாட்டில் இருக்கிறது என்றாலும், அதுதான் முழுமையான உண்மை என்பதை மனது ஏனோ ஏற்பதில்லை. 


-நா.கோபாலகிருஷ்ணன்

Comments

Popular posts from this blog

Preparing a book in Kindle direct publishing

உணவும் உணர்வும்

சிறுவாடு