இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _ இறுதி அத்தியாயம்

 இருபத்து ஒன்பது

வணக்கம் நண்பா… நலம்தானே… நேற்றுக் கூறியதைப் போல இன்று நிறுத்தற்குறிகள் குறித்த விளக்கத்தினை ஒன்றன் பின் ஒன்றாகப் பார்த்துவிடலாம் வா…

முற்றுப்புள்ளி (.)

முற்றுப்புள்ளியானது ஒரு தொடர் முற்றுப்பெற்றதைக் குறிக்கப் பயன்படுத்தப்படும்.

.கா.: கண்ணன் பள்ளிக்குச் சென்றான்.

அதேபோல சொற்குறுக்கங்களை அடுத்தும் இது பயன்படுத்தப்படும்

.கா.: திரு.வி..

அடுத்ததாக, பெயரின் தலைப்பெழுத்தை அடுத்து வரும்

.கா.: .பு.இளமாறன்.

காற்புள்ளி(,)

பல பொருட்களைத் தொடர்ந்து சொல்லும்போது காற்புள்ளியினைப் பயன்படுத்த வேண்டும்.

.கா.: மா, பலா, வாழை

அதேபோல பொருட்களை எண்ணும் இடங்களில் இதனை பயன்படுத்துதல் வேண்டும்.

.கா.: மா, பலா, வாழை ஆகியன முக்கனிகள் ஆகும்

வினையெச்சங்களுக்குப் பின்னால் காற்புள்ளியினைப் பயன்படுத்தவேண்டும்.

.கா. கண்ணன் கடைக்குச் சென்று, பால் வாங்கி வந்தான்

மேற்கோள்குறிகளுக்கு முன்னாலும் காற்புள்ளி இடவேண்டும்

.கா.: குழந்தை நிலவைப் பார்த்து, “நிலா நிலா ஓடிவாஎன்று பாடியது

மேலும், கடிதத்தில் விளிமுன் இதனைப் பயன்படுத்தவேண்டும்

.கா.: அன்புள்ள அம்மா,

அதேபோல முகவரியில் இறுதிவரி தவிர, மற்ற அனைத்து வரிகளின் இறுதியிலும் காற்புள்ளி இடவேண்டும்.

.கா.: வெற்றி, எண் 12, அண்ணாசாலை, சென்னை

 

அரைப்புள்ளி(;)

ஒரு எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடியும்போது அரைப்புள்ளியினைப் பயன்படுத்த வேண்டும்.

.கா.: கண்ணன் நன்றாகப் படித்தான்; முதல் மதிப்பெண் பெற்றான்; பரிசு கிடைத்தது

அதேபோன்று உடன்பாடு, எதிர்மறைக் கருத்துக்களை ஒன்றாகக் கூறும் இடத்தில் அரைப்புள்ளி பயன்படுத்தப்படவேண்டும்.

.கா.: நல்லவன் வாழ்வான்; தீயவன் தாழ்வான்

 

முக்காற்புள்ளி (:)

ஒரு சிறிய தலைப்பான தொகைச் சொல்லை விரித்துக் கூறும் இடத்தில் முக்காற்புள்ளி வரும்

.கா.: முத்தமிழ்: இயல், இசை, நாடகம்

 

வினாக்குறி (?)

வினாத்தொடரின் இறுதியில் வினாக்குறி பயன்படுத்தப்படும்.

.கா.:    எங்கே போனாய்?

 

உணர்ச்சிக்குறி / வியப்புக்குறி(!)

ஒரு செய்தியை உணர்ச்சியாகக் கூறுகையில் இது பயன்படுத்தப்படும்

.கா.:

என்னே, இப்பூவின்வாசம்! – வியப்பு

பாம்பு! பாம்பு! – அச்சம்

அந்தோ! இயற்கைஅழிகிறதே! –அவலம்

 

 

ஒற்றைமேற்கோள்குறி(‘)

ஒருஎழுத்தையோ அல்லது சொல்லையோ தனித்துக்காட்ட இது பயன்படுத்தப்படும்.

.கா.: பாரதியாரின்பாஞ்சாலி சபதம்மிகச் சிறந்த படைப்பு ஆகும்

இரட்டைமேற்கோள்குறியில் இன்னொரு கூற்று உட்பட்டு வரும்போதும் இது பயன்படுத்தப்படும்.

.கா.: கூட்டத்தின்தலைவர், “அறிஞர் அண்ணா அவர்கள் இப்போதுதலைப்பில்லைஎன்னும் தலைப்பில் பேசுவார்என்றுஅறிவித்தார்.

 

இரட்டைமேற்கோள்குறி (“)

இது ஒரு தொடரை மேற்கோளாகக் கூறப் பயன்படுத்தப்படும்.

.கா.:

அகத்தின்அழகுமுகத்தில்தெரியும்என்றார் ஔவையார்.

நிறுத்தற்கூறிகள் எங்கெங்கு இடவேண்டும் எனப் புரிந்ததா நண்பா.

கடந்த ஒரு மாத காலமாக தமிழில் பிழையின்றி எழுத என்னென்ன செய்யவேண்டும் என்று நிறைய உரையாடியுள்ளோம் நண்பா….. இவை அனைத்துமே உனக்கு மிகவும் பயன்படும் என்று நம்புகிறேன்…..

தமிழில் பிழையின்றி எழுத முனையும் உன் ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள். நாம் கற்றுக்கொண்ட அனைத்தையும் நினைவில் வைத்துக்கொண்டு தொடர்ச்சியாக முயன்றால், நம் தாய்த்தமிழினைப் பிழையின்றி எழுதலாம் நண்பா….. வாழ்த்துகள்.

*******

இத்தொடரினை இன்றோடு நிறைவு செய்கிறேன் தோழர்களே.

கடந்த ஒரு மாத காலமாக என்னோடு பயணித்த, எனக்கு ஊக்கமளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நன்றியினைக் கூறிக்கொள்கிறேன்.

தமிழ் வளர்க்கும் நம் முயற்சிகளைத் தொடர்வோம். இன்னும் ஒரு தொடரோடு மீண்டும் சந்திக்கிறேன்.

தமிழோடு வளர்வோம்…..

Comments

Popular posts from this blog

Preparing a book in Kindle direct publishing

உணவும் உணர்வும்

சிறுவாடு