இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் - நாள் 28
இருபத்து எட்டு
வாக்கியங்களில்
வரும் பிழைகளைப் பற்றிப் பார்த்துக்கொண்டிருந்தோம் நண்பா…
இன்றைக்கும்
அது குறித்துப் பார்ப்போம்.
பண்புத்தொகை
மற்றும் வினைத்தொகையாக வரும் சொற்களை ஒரு சொல்லாக எழுதவேண்டும். பிரித்து எழுதக்கூடாது.
எ.கா.: செங்கடல்
என எழுதுவதே சரியாகும். செங் கடல் என எழுதுவது
தவறாகும்.
பெயர்ச்சொல்,
வினைச்சொல் ஆகியவற்றிற்கு இடையில் நின்று பொருளைத் தெளிவாக உணர்த்தும் இடைச்சொற்களை
சேர்த்து எழுதவேண்டும்.
இடைச்சொல்லுடன்
சொற்களைச் சேர்த்தே எழுதவேண்டும்.
எ.கா.: பேசிய படி என எழுதுவது தவறு. பேசியபடி என எழுதுவதே சரியாகும்.
அதே போல சொற்புணர்ச்சியில்
நிலைமொழியின் ஈற்றெழுத்து மெய்யெழுத்தாகவும் வருமொழி முதலெழுத்து உயிரெழுத்தாகவும்
இருந்தால் அவற்றைச் சேர்த்தே எழுதவேண்டும்.
எ.கா.: சுடர் ஆழி என எழுதுவது தவறு. சுடராழி என எழுதுவதே சரியாகும்.
இவை போன்ற
விசயங்களை, வாக்கியங்கள் எழுதும் வேளையில் மறக்காமல் நினைவில் இருத்திக்கொள் நண்பா…..
வாக்கியங்களில்
நாம் செய்யும் மற்றொரு முக்கியமான பிழை, நிறுத்தற்குறிகள், காற்புள்ளி, அரைப்புள்ளி
போன்றவற்றினை முறையாகப் பயன்படுத்தாமல் இருப்பது.
அதனைக்குறித்த
விளக்கத்தினை நாளை விரிவாகப் பார்க்கலாம் நண்பா… காத்திரு..
Comments
Post a Comment