இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _ நாள் 26

 

இருபத்தாறு

என்ன நண்பா நலம்தானே…

இன்றைக்கு மயங்கொலிப் பிழைகள் குறித்த ஒரு சிறிய அறிமுகத்தைப் பார்க்கலாம் வா….

‘ண’ வுக்குப் பதில் ‘ன’ வினைப் பயன்படுத்துவது, ‘ல’ வுக்குப் பதில் ‘ள’ வினைப் பயன்படுத்துவது போன்ற பிழைகள் மயங்கொலிப்பிழைகள் எனப்படும்.

இவற்றைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளை நாம் ஏற்கனவே படித்த பாடத்தில் இருந்து நினைவு படுத்திக்கொள்வோம்.

ஏழாம் நாள் பாடத்தில் நாம் இன எழுத்துக்கள் குறித்துப் பார்த்தோமே , நினைவில் உள்ளதா..?

Ø  ங் – க   ( எ.கா. : சிங்கம்)

Ø  ஞ் – ச  (எ.கா. : மஞ்சள்)

Ø  ண் – ட (எ.கா. : பண்டம்)

Ø  ந்  - த (எ.கா. : பந்தல்)

Ø  ம் – ப (எ.கா. : கம்பன்)

Ø  ன் – ற (எ.கா.: தென்றல்)

சரிதான் நண்பா…

எங்கெல்லாம் குறிப்பிட்ட மெல்லின மெய் வருகின்றதோ அங்கெல்லாம் அதற்கு நட்பான வல்லின உயிர்மெய் எழுத்து மட்டும்தான் வரும்.

‘ட’ இருந்தால் அங்கு ‘ண்’ தான் வரும் என்பது போன்று நினைவில் வைத்துக்கொள்.

அதே ஏழாம் நாள் பாடத்தில் உடனிலை மெய்ம்மயக்கம் (க்,ச்,த்,ப்) மற்றும் வேற்றுநிலை மெய்ம்மயக்கம் (ர்,ழ்) குறித்தும் பார்த்தோம் அல்லவா…? அவற்றையும் நினைவில் வைத்துக்கொள்.

அடுத்ததாக எட்டாம் நாள் பாடத்தில் முதல், இடை மற்றும் கடைசியில் வரும் எழுத்துக்களைப் பற்றிப் பார்த்தோமே நினைவில் உள்ளதா…? அவற்றினையும் நினைவு படுத்திப் பார்.

இவற்றையெல்லாம் நினைவில் வைத்துக்கொள்வதன் மூலம், இப்பிழைகளை உன்னால் தவிர்க்க இயலும்.

அதே போல மூணு சுழி ண, இரண்டு சுழி ன என்றெல்லாம் கூறுவதற்குப் பதில் அவற்றின் சிறப்புப் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்.

ந – தந்நகரம்

ன – றன்னகரம்

ண – டண்ணகரம்

ற – வல்லின றகரம்

ர – இடையின ரகரம்

ல – நுனி நா லகரம்

ள – மடி நா நகரம்

ழ – சிறப்பு ழகரம்.

சரிதானே நண்பா…..? மீண்டும் நாளை சந்திப்போம்

Comments

Popular posts from this blog

Preparing a book in Kindle direct publishing

உணவும் உணர்வும்

சிறுவாடு