இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _ நாள் 24
இருபத்து நான்கு
நண்பா…. வா
இன்றைக்கு வல்லினம் மிகா இடங்களுக்கான மிச்சம் உள்ள விதிகளைப் பார்த்து விடலாம்.
விதி 24: நிலைமொழி உயர்திணையாய் அமையும் பெயர்த்தொகையில் வல்லினம் மிகாது
எ.கா.: தலைவி கூற்று
இரண்டு சொற்கள்
சேரும்போது முதலில் உள்ள சொல்லினை நிலைமொழி என்றும், அதனுடன் வந்து சேரும் சொல்லினை
வருமொழி என்றும் சொல்வதும் வழக்கம் நண்பா…
ஒரு நிலைமொழியானது
உயர்திணையாய் இருக்கும் பெயர்த்தொகையில் எப்போதும் வல்லினம் மிகாது நண்பா….
விதி 25: கள் என்னும் அஃறிணைப் பன்மை விகுதி சேரும்போது வல்லினம் மிகாது
எ.கா.: கருத்துகள், வாழ்த்துகள்
ஒருமையைப்
பன்மையாக மாற்ற கள் விகுதி சேர்க்கவேண்டும் அல்லவா. அப்படியான அஃறிணைப் பொருளுக்கான
பன்மை விகுதியாக கள் சேரும்போது வல்லினம் மிகக்கூடாது என்பதே விதி நண்பா….
வாழ்த்துக்கள்
என்று சொல்வது தவறு. வாழ்த்துகள் என்று சொல்வதே சரியானது நண்பா….
விதி26: ஐகார வரிசை உயிர்மெய் ஓரெழுத்துச் சொற்களாய் வர, அவற்றோடு கள் விகுதி
சேரும்போது வல்லினம் மிகாது.
எ.கா.: பைகள், கைகள்
‘ஐ’ வரிசையில்
உள்ள உயிர்மெய் எழுத்துக்கள் ( அதாவது கை, ஙை, சை, ஞை…..) ஓர் எழுத்துச்சொற்களாய் வரும்போது
( உதாரணம்: கை, பை ) அவற்றோடு கள் விகுதி சேரும் வேளையில் வல்லினம் மிகாது என்பது விதி.
அவ்வளவுதான்
நண்பா….
வெற்றிகரமாக
வல்லினம் மிகா இடங்களுக்கான விதிகளைப் பார்த்து முடித்து விட்டோம்.
மீண்டும்
நாளை சந்திக்கலாம்.
Comments
Post a Comment