இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _நாள் 22
இருபத்தியிரண்டு
என்ன நண்பா…
நலம்தானே…. இதுவரை நாம் பார்த்த வலி மிகா இடங்களின் விதிகள் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்…
இன்றைக்குச்
சில எளிமையான விதிகளைப் பார்க்கலாம்.
விதி 12: அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகாது
எ.கா.: அவ்வளவு பெரியது, இவ்வளவு தாகமா?,
எவ்வளவு சப்தம்.
விதி 13: அத்தனை, இத்தனை, எத்தனை ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகாது
எ.கா.:
அத்தனை சிறியது, எத்தனை பெரியது, இத்தனை காசுகளா?
விதி 14: அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகாது
எ.கா.: அவ்வாறு சொன்னான், இவ்வாறு கூறினான்,
எவ்வாறு போவான்
விதி 15: அத்தகைய, இத்தகைய, எத்தகைய ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகாது.
எ.கா.: அத்தகைய கவிதைகள், இத்தகைய கதைகள்,
எத்தகைய காட்சி
விதி 16: அப்போதைய, இப்போதைய, எப்போதைய ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகாது
எ.கா.: அப்போதைய காட்சி, இப்போதைய தவிப்பு,
எப்போதைய பாடம்
விதி 17: அப்படிப்பட்ட, இப்படிப்பட்ட, எப்படிப்பட்ட ஆகிய சொற்களின் பின்
வல்லினம் மிகாது
எ.கா.: அப்படிப்பட்ட காட்சி, இப்படிப்பட்ட
கவிதை, எப்படிப்பட்ட கதை
விதி 18: நேற்றைய, இன்றைய, நாளைய ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகாது
எ.கா.: நேற்றைய சண்டை, இன்றைய காலை, நாளைய
தவிப்பு
எல்லா விதிகளும்
எளிமையாகப் புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன் நண்பா…
நாளை மீண்டும்
தொடர்வோம். காத்திரு
Comments
Post a Comment