Floor Space Index _ வீட்டுக்கடன் அ முதல் ஃ வரை புத்தகத்திலிருந்து

ஒரு கட்டிடம் கட்ட அனுமதி பெற முயலும் போது ( முக்கியமாக நகராட்சி அல்லது மாநகராட்சி யில்) எஃப்.எஸ்.ஐ. / எஃப்.எஸ்.ஆர் (FSI / FSR )என்னும் வார்த்தையைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். அதன் விபரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

FSI என்பது ஒரு நிலத்தில் எவ்வளவு பரப்பிற்கு கட்டிடம் கட்டலாம் என்பதனைச் சொல்லும் விகிதம். சில வேளைகளில், இது ஒவ்வொரு மாநகராட்சிக்கும் மாறுபடக் கூடும். சமீபத்தில் தமிழக அரசு இதனை 1.5 லிருந்து, 2 க்கு உயர்த்தியுள்ளது.

FSI என்பது அனைத்து தளங்களையும் மொத்தம் சேர்த்த பரப்பினை நிலத்தின் பரப்பால் வகுக்க கிடைக்கும் விகிதம் ஆகும். FSR என்பது விகிதமாகவும், FSI என்பது குறியீடு ஆகவும் சொல்லப்படும்.

அதாவது

FSR = (அனைத்துத் தளங்களின் கார்ப்பெட் ஏரியா / நிலத்தின் பரப்பு )

FSI = (அனைத்துத் தளங்களின் கார்ப்பெட் ஏரியா / நிலத்தின் பரப்பு ) X 100

உதாரணமாக,

ஒரு பிளாட்டின் பரப்பு 1000 சதுர அடி இருக்கிறது. அதில் தரைத்தளம் 600சதுரடி கார்ப்பெட் ஏரியாவுடனும், முதல் தளம் 500சதுரடி கார்ப்பெட் ஏரியாவுடனும் கட்டப்பட்டிருக்கிறது என வைத்துக் கொள்வோம்.

எனில், FSR = (600+500) / 1000 = 1.1

அதே போல் ஒரு மாநகராட்சியில் FSI 125% எனச் சொல்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். உங்களின் இடம் 1000 சதுரடி எனில் அதில் 1250சதுரடி கார்ப்பெட் ஏரியா உள்ள கட்டிடத்தை நீங்கள் கட்டிக் கொள்ளலாம்.

இவ்வளவுதான் விசயம்.

-நா.கோபாலகிருஷ்ணன்

Comments

Post a Comment

Popular posts from this blog

Preparing a book in Kindle direct publishing

உணவும் உணர்வும்

சிறுவாடு