EMI FORMULA
பொதுவாக ஃபினான்சியல் துறையில் இருக்கும் எல்லோர் கையிலும் இருக்கும் ஒரு விசயம் இ.எம்.ஐ. அட்டவணை. பெரும்பான்மையான நண்பர்கள் இந்த இ.எம்.ஐ. யின் சூத்திரத்தை அறிந்து இருக்கக் கூடும். அறிந்து இருக்காத சில நண்பர்களுக்காய்.
EMI = P * R (1+R)^N / (1+R)^N-1
இதுதான் அந்த சூத்திரம்.(ஃபார்முலா).
ஒரு சிறிய கணக்கீட்டின் மூலம் இதனை புரிந்து கொள்வோம்.
1லட்ச ரூபாய் கடனுக்கு 3 வருடம் அதாவது 36 மாதங்களின் தவணை 19.99% வட்டி விகிதத்தில் என்ன எனக் கணக்கிட்டுப் பார்ப்போம்.
P = அசல் = ரூ1,00,000/-
R = வட்டி (மாதத்திற்கு) = 19.99% = 19.99 / (12*100) = 0.01666
N = தவணைக் காலம் = 36 மாதங்கள்
எனவே,
EMI = 1,00,000 * 0.01666 * (1+0.01666) ^ 36 / (1+0.01666) ^ 36 – 1
முதல் படி = 1,00,000 * 0.01666 = 1666
இரண்டாம் படி= (1+0.01666) ^ 36 = 1.8127
மூன்றாம் படி = (1+0.01666) ^ 36 – 1 = 0.8127
இறுதியாக
EMI = ( 1666 * 1.8127 ) / 0.8127
= 3715.96 அதாவது ரூ.3716/-
அவ்வளவுதான்.
-நா.கோபாலகிருஷ்ணன்
உபயோகமான தகவல்
ReplyDeleteஎன்னதான் எளிமையா சொன்னாலும் இது என் மண்டைக்கு ஏறாது. ஒரு பர்சனல் லோன் EMI போய்க்கிட்டிருக்கு. 4 வருஷத்துல இன்னும் இரண்டரை வருஷம் பாக்கி இருக்கு. அத இப்பவே மொத்தமா முடிக்கனும். முடியுமா சொல்லுங்க.
ReplyDeleteகண்டிப்பா முடிக்கலாம் சகோ. இந்த மாசம் உங்களோட அசல் நிலுவை எவ்வளவோ அதனை மட்டும் கட்டி கடனை முடித்துவிடலாம். மீதமுள்ள மாதங்களுக்கான வட்டியினைச் செலுத்த வேண்டிய அவசியம் கிடையாது.
Deleteதகவலுக்கு நன்றி. முயற்சிக்கிறேன்.
ReplyDelete