பிளின்த் ஏரியா, பில்ட் அப் ஏரியா, கார்பெட் ஏரியா - விளக்கங்கள்
கட்டிடம் தொடர்பான சில கலைச் சொற்களைத் (Technical Words ) தெரிந்து கொள்வோம்.
பிளின்த் ஏரியா (Plinth Area) :
ஒரு கட்டிடத்தின் வெளிச்சுவர்களுக்கு இடைப்பட்ட பரப்பு பிளின்த் ஏரியா எனப்படும். உதாரணமாக ஒரு தரைத்தளக் கட்டிடம் நீளம் 22 அடி அகலம் 20 அடி உள்ள செவ்வகமாகக் கட்டப்பட்டிருக்கிறது எனில் பிளின்த் ஏரியா என்பது 22 X 20 = 440 சதுரடி ஆகும். இதில் படிக்கட்டு, நீட்டி விடப்பட்டிருக்கும் பால்கனி போன்றவற்றின் பரப்பு சேராது.
பில்ட் அப் ஏரியா (Built up area ):
ஒரு கட்டிடத்தின் அனைத்துத் தளங்களின் மொத்த பரப்பு பில்ட் அப் ஏரியா எனப்படும். உதாரணமாக ஒரு கட்டிடம் தரைத்தளத்தில் 400 சதுரடியுடனும், முதல் தளத்தில் 300 சதுரடியுடனும், இரண்டாம் தளத்தில் 300 சதுரடியுடனும் கட்டப்பட்டிருக்கிறது. இதன் பில்ட் அப் ஏரியா என்பது 400+300+300 = 1000சதுரடி ஆகும்.
கார்ப்பெட் ஏரியா (Carpet Area) :
கார்ப்பெட் ஏரியா என்பது சுவர்களின் பரப்பினைச் சேர்க்காத கட்டிடத்தின் பரப்பு ஆகும். அதாவது நாம் உபயோகிக்கும் தளத்தின் பரப்பு ஆகும். உதாரணமாக 500 சதுர அடி கட்டிடத்தில் மொத்தமாக நான்கு அறைகள் உள்ளன என வைத்துக் கொள்வோம். ஹால் 10 க்கு 16, சமையலறை 10 க்கு 8, படுக்கையறை 10 க்கு 10 மற்றும் கழிப்பறை 4 க்கு 5 என்ற அளவில் உள்ளது எனில் கார்ப்பெட் ஏரியா என்பது (10 X 16 ) + (10 X 8 ) + (10 X 10 )+ ( 4 X 5 ) = 360 சதுரடி ஆகும்.
இதில் பால்கனி, படிக்கட்டு போன்றவற்றின் பரப்பு சேர்ந்து இருக்கும்.
சூப்பர் பில்ட் அப் ஏரியா (Super Built up Area):
இது பொதுவாக அப்பார்ட்மெண்ட்களில்
(Apartments) உபயோகிக்கப்படும்
சொல் ஆகும். ஒரு பிளாட்டின் பரப்பு மற்றும் பொதுவான உபயோக தளத்தின் (படிக்கட்டு, லிப்ட், வராண்டா போன்றவை) அந்த பிளாட்டுக்கு உள்ள பரப்பு இரண்டும் சேர்ந்தது சூப்பர் பில்ட் அப் ஏரியா ஆகும்.
உதாரணமாக நாம் வாங்கப்போகும் பிளாட்டின் உண்மையான பரப்பு 500 சதுர அடி என வைத்துக் கொள்வோம்.
அந்த அப்பார்ட்மெண்ட்டில் மொத்தம் 10 பிளாட்டுகள் உள்ளன. படிக்கட்டு, வராண்டா போன்ற பொதுவான தளங்களின் பரப்பு 8000 சதுர அடி என வைத்துக் கொள்வோம்.
இப்போது சூப்பர் பில்ட் அப் ஏரியா என்பது 500 + (8000/10) =
580சதுரடி ஆகும். (இந்த பரப்பிற்குத்தான் உங்கள் விலை நிர்ணயிக்கப்படும். )
அன் டிவைடேட் ஷேர் ஏரியா(Un divided Share Area) :
இதுவும் பொதுவாக அப்பார்ட்மெண்ட்களில் உபயோகிக்கப்படும் சொல். நாம் ஒரு தனி வீடு வாங்குகிறோம் என வைத்துக் கொள்வோம். மொத்த இடம், மற்றும் வீடு இது நமக்கு சொந்தமாகும். ஆனால் அப்பார்ட்மெண்ட்டில் ஒரே ஒரு பிளாட் தரைத்தளத்திலோ அல்லது 22 வது மாடியிலோ வாங்கினால் எந்த இடம் நமக்கு சொந்தம் என்று தெரியும்? அங்கே உள்ள அனைவருக்கும் அந்த இடம் சொந்தம் அல்லவா? அதற்குதான் இந்த முறை உபயோக்கிப்படுகிறது. மொத்த இடத்தினையும் பிரிவினையில்லாமல் ஒவ்வொருவரும் சொந்தம் கொண்டாடிக் கொள்வது. ஒவ்வொருவரும் வாங்கிய பிளாட்டின் பரப்பிந் விகிதத்திற்கு ஏற்றபடி மொத்த இடத்தின் பரப்பானது பிரித்து பதிவு செய்து தரப்படும். அதுதான் அன் டிவைடேட் ஷேர் ஏரியா
-நா.கோபாலகிருஷ்ணன்
மின் அஞ்சல் வழியாக உங்கள் பதிவுகளை பெற்று படிக்கிறேன். இந்த துறை குறித்து தெரிந்து கொள்ள ஆசை. நன்றாக வந்துள்ளது. தொடர்ந்து கடைசி வரைக்கும் எழுதுங்க. நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி அண்ணா, உங்கள் வழிகாட்டுதலும், ஆதரவும்தான் தொடர்ந்து செயல்பட ஊக்கமளிக்கின்றது.
Delete