மூளையின் அதிர்வெண்
மூளையின் அதிர்வெண் பற்றி கேள்விப்பட்டதுண்டா?
நம் தினசரி வாழ்வில் நிகழும் நிகழ்வுகளுக்கு ஏற்ப நம் மூளை அதிர்வுகளை வெளிப்படுத்துகிறது.
ஒரு நொடியில் ஏற்படும் அலைவுகளின் எண்ணிக்கை அதிர்வெண் எனப்படும்.
நம் மூளை வெளிப்படுத்தும் அதிர்வெண்களின் அடிப்படையில் , மொத்தம் நான்கு நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1. பீட்டா நிலை:
இந்நிலையில் மூளையின் அதிர்வெண் பதினைந்து முதல் நாற்பது வரை இருக்கும்.
நமது சாதாரண நிலையில் அதிர்வெண் இருபது வரை இருக்கும். உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருபது முதல் நாற்பது வரை இருக்கும்.
அதிர்வெண் அதிகரிக்க அதிகரிக்க உடல் நலம் குறையும் என சொல்லத் தேவையில்லை.
2. ஆல்பா நிலை:
இந்நிலையில் அதிர்வெண் எட்டு முதல் பதினான்கு வரை இருக்கும்.
பொதுவாக எந்தக் கவலையும் இன்றி மனமும் உடலும் ஓய்வில் இருக்கும்போது மூளை இந்நிலையில் இருக்கும்.
இந்நிலையில் நம் உள்ளுணர்வு மிகச்சிறப்பாக இருக்கும்.
பொதுவாக தியானம் செய்யும் பொழுது இந்நிலை அடையக்கூடும்.
3.தீட்டா நிலை:
இதில் அதிர்வெண் நான்கு முதல் ஏழு வரை இருக்கும்.
ஆழ்ந்த உறக்கத்திற்கு முந்தைய நிலை இது.
4. டெல்டா நிலை:
இந்நிலையில் ஒன்று முதல் மூன்று வரை அதிர்வெண் இருக்கும்.
இதனைச் சமாதி நிலை என்றும் சொல்லலாம்.
பொதுவாக நம் மூளை எப்போதும் பீட்டா நிலையில்தான் இருக்கும். ஆனால் நம் உணர்வுகளைச் சிறப்பாகக் கையாள்வதன் மூலம் அதிர்வெண்களைக் குறைக்க முடியும்.
பொதுவாக அதிர்வெண்கள் குறையும் போது நமது கவனத்திறன் அதிகரிக்கும். அதனால்தான் தியானம் செய்து முடித்த பின் அல்லது அதிகாலை நேரங்களில் படிக்கும் போது சுலபமாகப் புரிந்து கொள்ள முடிவதும் , மனதில் இருத்திக் கொள்ள முடிவதும்.
- நா.கோபாலகிருஷ்ணன்
Comments
Post a Comment