பசலி _ விளக்கம்
நேற்று நண்பர் ஒருவர் பசலி என்றால் என்னவென்று கேட்டார்.
லீகல் ஒப்பினியன் வாங்க வக்கீல் கேட்கிறார், பசலின்னா என்ன என்றார்.
பசலி என்பது ஒரு அராபிய வார்த்தை. அதற்கு அறுவடை என்று பொருள். முகலாயர்கள் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு நில ஆவணம் அது.
பொதுவாக ஒரு பசலி வருடம் என்பது நாம் பின்பற்றும் ஆங்கில நாட்காட்டியில் ஜூலை மாதம் ஆரம்பித்து அடுத்த வருடத்தின் ஜூன் மாதத்தில் முடிவடையும்.
அதே போல பசலி வருடம் என்பது முகலாயர்களின் ஆண்டினை அடிப்படையாகக் கொண்டது. அதற்கும் நமது ஆங்கில நாட்காட்டிக்கும் 590 வருடங்கள் வித்தியாசம் இருக்கும். அதாவது 1390ம் வருட பசலி என்பது ஜூலை 1980 (1390+590) முதல் ஜூன் 1981 வரை உள்ள காலகட்டம்.
அவரிடம் 1395ம் எண் பசலி வேண்டும் என்று கேட்டிருந்தார்களாம். அப்படி என்றால் அது ஜூலை1985 முதல் ஜூன்1986 வருடம் வரை உள்ள ஆவணம் ஆகும்.
- நா.கோபாலகிருஷ்ணன்
Comments
Post a Comment