கிண்டில் என்றால் என்ன? மின்புத்தகம் என்றால் என்ன?
அமேசான் வலைதளம் பற்றிய அறிமுகம் தேவையில்லை. ஆன்லைன் விற்பனை உலகில் கொடி நாட்டியவர்கள். அவர்கள் அறிமுகம் செய்ததுதான் கிண்டில் என்னும் மின்கருவி.
செல்போன் மற்றும் டேப் போல அதுவும் ஒரு கையடக்கக் கருவி. அதில் நீங்கள் எத்தனை புத்தகங்கள் வேண்டுமாயினும் வாங்கிக்கொள்ளலாம். சேமித்துவைத்துத் தேவைப்படும்போது எடுத்துப் படித்துக்கொள்ளலாம். அனைத்தும் மின் புத்தகவடிவில்….. சுருங்கச்சொன்னால் கிண்டில் என்பது உங்களின் நடமாடும் புத்தக அலமாரி.
இந்தக் கிண்டில் கருவியினை நீங்கள் அமேசானில் வாங்கிக்கொள்ளமுடியும். வெவ்வேறு விலையில் வெவ்வேறு தரத்தில் கிடைக்கின்றது.
கிண்டில் வாங்க இயலவில்லை, அல்லது விருப்பம் இல்லையெனில் கிண்டில் ஆப்பினை உங்கள் மொபைல் அல்லது கணிணியில் தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளலாம். இதன் மூலமும் நீங்கள் புத்தகங்கள் வாங்கலாம், படிக்கலாம்.
இந்த ஆப்பினை தரவிறக்கம் செய்தபின் உங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன.
1. கிண்டில் சேவைக்கு பணம் கட்டி அதன் வாடிக்கையாளர் ஆகிக்கொள்ளலாம். உங்கள் வசதிக்குத் தக்கவாறு மாதாமாதம் ( ரூ169/ மாதத்திற்கு) அல்லது வருடந்தோறும் சந்தா கட்டும் வசதியினைத் தேர்வு செய்து கொள்ளலாம். இப்படிப் பணம் கட்டி சந்தாதாரர் ஆவதன் மூலம் கிண்டிலில் உள்ள ஆயிரக்கணக்கான நூல்களை நீங்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்து (இரவல் பெற்று) படித்துக்கொள்ளலாம். உங்களுக்குத் தேவையான மின் நூல்களை விலைக்கும் வாங்கி சேமித்து வைக்கலாம்.
2. சந்தா கட்ட விருப்பம் இல்லாதவர்கள், கிண்டில் ஆப்பினைத் தரவிறக்கம் செய்து வைத்துக்கொண்டால், தேவையான மின் நூல்களைப் பணம் கொடுத்து வாங்கி படித்துக்கொள்ளலாம். அதேபோல ஒவ்வொரு நாளும் நிறைய புத்தகங்கள் இலவசமாக விற்கப்படும். அதனையும் நீங்கள் இலவசமாக வாங்கிப்படிக்கமுடியும். இரவல் பெறும் வசதி கிடைக்காது.
கிண்டில் மூலம் கிடைக்கும் பயன் என்னவென்றால், பதிப்பிக்கப்பட்ட புத்தகங்களைக் காட்டிலும் மின் புத்தகங்கள் விலை குறைவாக இருக்கும். பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை சுலபமாய்த் தூக்கித் திரிய முடியும். முக்கியமாய், கிடைக்கும் எந்த ஓய்வு நேரத்தினையும் படிப்பதற்கு ஒதுக்க இயலும்.
கிண்டில் ஆப்பினை உபயோகிப்பது எப்படி?
கிண்டில் ஆப்பினை உபயோகிப்பது மிகவும் எளிது.
முதலில் கிண்டில் ஆப்பினைத் தரவிறக்கம் செய்து உங்கள் மொபைலில் (அல்லது கணிணியில்) நிறுவிக்கொள்ளுங்கள்
இப்பொழுது அதனைத் திறந்தால், முதல் பக்கத்தின் கீழ் பகுதியில் Home, Library, Store, More என நான்கு கட்டளைகள் இருக்கும்.
Home பக்கத்தினில்தான்
நீங்கள் இப்போது இருக்கின்றீர்கள்.
Library:
Library என்பது நீங்கள் வாங்கிய புத்தகங்களைச் சேமித்து வைக்கும் பகுதி. நீங்கள் ஏதாவது புத்தகம் காசு கொடுத்து வாங்கியிருந்தால் ( அல்லது இலவச ஆஃபரில் இலவசமாக வாங்கியிருந்தால்) அது இந்தப் பகுதியில் நிரந்தரமாக இருக்கும். Kindle unlimited ல் படிப்பதற்காக இரவல் வாங்கியிருந்தால் அதுவும் இதில் இருக்கும்.
Kindle unlimited என்பது கிட்டத்தட்ட ஒரு Lending Library போல. எழுத்தாளர்கள் தங்கள் புத்தகத்தினை கிண்டிலில் வெளியிடும்போது இதில் பதிவு செய்து கொண்டால், அந்தப்புத்தகம் இந்த Kindle unlimited list ல் இருக்கும். நீங்கள் அதனை இரவல் பெற்று வாசித்துக் கொள்ளலாம். அதற்கு சில வரைமுறை இருக்கும். உதாரணமாக உங்களால் 10 இரவல் புத்தகம் வரை வாங்கமுடியும். அதற்கு மேல் ஏதேனும் இரவலாக தரவிறக்கம் செய்து படிக்கவேண்டுமெனில் ஏற்கனவே இரவல் பெற்ற புத்தகத்தில் இருந்து ஏதேனும் ஒரு புத்தகத்தை நீங்கள் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்.
Store:
Store என்னும் கட்டளையை அழுத்தி உள்ளே போனால், அதன் மேல் பகுதியில் நிறையக் கட்டளைகள் இருக்கும்.
முதல் கட்டளையாக
Kindle unlimited என்று இருக்கும். அதைக் கிளிக் செய்து உள்ளே சென்றால், நாம் இரவல்
பெற்றுக்கொள்ளத் தகுந்த புத்தகங்களின் விபரங்கள் அதில் இருக்கும். அதிலிருந்து உங்களுக்குத்
தேவையானதை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
அடுத்ததாக My subscription என்ற கட்டளை இருக்கும். அதில் சந்தா செலுத்துவது மற்றும் அதன் விபரங்கள் இருக்கும்.
அடுத்ததாக Deals என்ற கட்டளை இருக்கும். அதில் தள்ளுபடி விலையில் விற்கப்படும் புத்தகங்கள் குறித்த விபரங்கள் இருக்கும்.
அடுத்ததாக Best sellers என்ற கட்டளை இருக்கும். அதில் அதிகமாக விற்பனை ஆகும் புத்தகங்களின் விபரங்கள் இருக்கும்.
அடுத்ததாக
உள்ளது Language என்ற கட்டளை. இதன் உள்ளே போனால் ஹிந்தி, தமிழ், மராத்தி, மலையாளம்,
குஜராத்தி போன்ற மொழிகள் இருக்கும். அதில் தமிழைத் தேர்ந்தெடுத்தால், தமிழில் உள்ள
அனைத்துப் புத்தகங்களின் விபரமும் உங்களுக்கு கிடைக்கும்.
கடைசியாக
e text books என்னும் கட்டளை இருக்கும். இதன் உள்ளே கிண்டிலில் உள்ள பாடப்புத்தகங்கள்
குறித்த விபரங்கள் இருக்கும்.
ஏதேனும் ஒரு புத்தகத்தினை நீங்கள் கிளிக் செய்தால் அந்தப்புத்தகத்தின் விலை மற்றும் விபரங்கள் திறக்கும். அதில் இரண்டு வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கும். முதலில் READ FOR FREE என்று இருக்கும் ( Kindle Un limited ல் உள்ள புத்தகங்களுக்கு மட்டுமே இது இருக்கும்). இதனை கிளிக் செய்து இரவல் பெற்று படித்துக்கொள்ளலாம். இரண்டாவதாக BUY NOW என்று இருக்கும். இதை கிளிக் செய்வதன் மூலம் அந்தப் புத்தகத்தினை விலைக்கு வாங்கிக்கொள்ளலாம்.
இவ்வாறு நீங்கள்
வாங்கும் புத்தகம் உடனடியாகத் தரவிறக்கம் செய்யப்பட்டு உடனடியாகத் திறக்கும். நீங்கள்
பிற்பாடு வாசிக்க வேண்டுமெனில் அது உங்கள் Library ல் இருக்கும்.
இவ்வளவுதான் கிண்டில் பற்றிய விசயம்
வாழ்த்துகள். கருப்பு பின்புலம் வேண்டாம். வெள்ளை நிறத்திற்கு மாற்றிக் கொள்ளுங்க.
ReplyDeleteநன்றி அண்ணா... மாற்றி விட்டேன்
Delete