சோழர் சரித்திரம் 1

பிற்காலச் சோழர் சரித்திரத்தில் ராஜராஜசோழன் ஆட்சிப்பகுதிதான் மிக முக்கியப்பகுதி. ராஜ ராஜ சோழன் பற்றிய எல்லாப் புனைவுகளிலும் உத்தமசோழர் மற்றும் அவரது மகன் கண்டராதித்தன் இருவரும் பெரும்பாலும் ஒரு எதிர்க்  கதாபாத்திரத்தில் இடம்பெறுவது உண்டு. உண்மையில் சோழ சரித்திரத்தில் என்னதான் குழப்பம் என்று எனக்குத் தோன்றியது உண்டு. யாருக்கேனும் தெரியாமலிருந்தால் / தெரிந்துகொள்ள ஆர்வம் இருந்தால் அவர்களுக்காக இந்தப் பதிவு.

இது பராந்தக சோழரில் இருந்து ஆரம்பிக்கிறது.

பராந்தகருக்கு மூன்று மகன்கள். மூத்தவர் இராஜாதித்தன், இரண்டாமவர் கண்டராதித்தன், மூன்றாமவர் அரிஞ்சயர்.

இராஜாதித்தன் ஒரு போரில் இறந்து விட்டதால், பராந்தகருக்குப்பின் கண்டராதித்தர் ஆட்சிக்கு வந்தார். அவர் இறக்கும்போது அவரது புதல்வர் உத்தமசோழர் குழந்தையாய் இருந்ததால், அரிஞ்சயர் ஆட்சி பொறுப்பேற்றார்.

அரிஞ்சயர் இரண்டு ஆண்டுகளில் இறந்துவிட, அப்போதும் உத்தமசோழர் குழந்தையாய் இருந்ததால், அரிஞ்சயரின் மகன் சுந்தரசோழர் அரசரானார்.

சுந்தரசோழர் காலாமானபோது அவரின் மகன் அருள்மொழிவர்மனும் (ராஜராஜரின் இயற்பெயர்), உத்தமசோழரும் பட்டத்து உரிமைக்குத் தயாராய் இருந்தார்கள். (சுந்தரசோழரின் மூத்த மகன் கரிகாலன் அதற்கு முன்னதாகவே இறந்து போனார்).

ராஜராஜர் குழப்பத்தைத் தவிர்க்க, உத்தமசோழரை ஆட்சியில் அமரவைத்தார். உத்தமசோழருக்குப் பின் அவரது மகன் கண்டராதித்தன் குழப்பம் செய்யக்கூடும் என ஒரு பயம் எல்லோருக்கும் இருந்தது.

ஆனால் உத்தமசோழருக்குப்பின் ராஜராஜனும், ராஜராஜனுக்குப்பின் அவரது மகன் மதுராந்தகனும் (ராஜேந்திர சோழரின் இயற்பெயர்) அரசரானது வரலாறு.

கண்டராதித்தன் சிவனருட்செல்வனாகவே வாழ்ந்தான் என்றும், அவனுக்கும் ராஜராஜனுக்கும் நல்ல உறவு இருந்ததாகவுமே வரலாறு.

சரித்திரக் கதை எழுதும் நண்பர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய வரலாற்றுப்பகுதி இது. நிறையப் புனைவுகள் எழுதலாம்.

- நா.கோபாலகிருஷ்ணன்

Comments

Post a Comment

Popular posts from this blog

Preparing a book in Kindle direct publishing

உணவும் உணர்வும்

சிறுவாடு