Preparing a book in Kindle direct publishing
கிண்டிலில் புத்தகம் பதிவேற்றும்போது அது குறிப்பிட்ட சில வடிவங்களில் இருக்கும் புத்தகங்களை மட்டுமே அனுமதிக்கும். பொதுவாக அனைவரும் புத்தகங்களை word format ல் தயார் செய்து பதிவேற்றுவார்கள். இதில் உங்கள் புத்தகத்தின் தலைப்புகளை நேர் செய்வது, அத்தியாயம் பிரிப்பது போன்ற வேலைகளை கவனமாகச் செய்தல் வேண்டும். மேலும் கொஞ்சம் கால நேரம் எடுத்துக்கொள்ளும். இதற்கும் ஒரு சுலபமான வழியினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள். அது Kindle create / KPF எனப்படும் Kindle Package format வசதி. உங்கள் Google browser ல் சென்று Kindle Create என அடித்துத்தேடினால் அமேசான் பக்கத்திற்குச் சென்று விடலாம். அதில் முதல் பக்கத்தில் Kindle Create என்றும் அதன் கீழே Download fo PC என்றொரு சுட்டியும் இருக்கும். அதனைச் சுட்டினால் உங்கள் கணிணியில் நிறுவ வேண்டிய மென்பொருள் தரவிறக்கம் ஆகும். அந்த file னைத் திறந்து Run என்பதனை அழுத்தி அந்த மென்பொருளை நிறுவிக்கொள்ளவும். இப்போது உங்கள் கணிணியில் Kindle Create என்பதன் Icon தெரியும். அடுத்த செயலுக்குச் செல்லும் முன்னால், உங்கள் புத்தகத்தினை word...